பாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர் .

பாகிஸ்தானின் வர்த்தகநகரமான காரச்சியில் நேற்று திடீரென்று கலவரம் வெடித்தது.பாகிஸ்தானில் சாடாநகரில் இருக்கும் பஜார் முன்பு ஜமைத்-இல்-இஸ்லாம் கட்சியினைச் சேர்ந்த ஜூனியாத்ஜகாதி என்பவர் படுகொலை

செய்யப்பட்டார். இவர் அந்தபகுதி ஒன்றிய கவுன்சில் தலைவராக இருக்கிறார் .

இவரது ‌படுகொலைக்கு மற்றொரு அமைப்பான முத்தாகிதா கூவாமி என்ற இயக்கமும் அவாமி-தேசிய கட்சியை சேர்ந்தவர்களும்தான் காரணம் என்று கூறபடுகிறது. இதனால் இரண்டு பிரவினருக்கும் ‌இடையே திடீர் ‌என்று நேற்று மோதல் உருவானது . இது கலவரமாக மாறியது . இந்த கலவரத்தில் 10க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தெரிகிறது, கட்டுகடங்காமல் நிலைமை போகவே அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அ‌மல்படுத்தபட்டுள்ளது

Leave a Reply