சத்ய சாய்பாபா மே 14ம் தேதி மீண்டும் வருவதாக தன்னிடம் கூறியதாக சூர்யமாதா என்ற பெண் பக்தர் நடத்திய திடீர்-போராட்டத்தால் புட்டபர்த்தியில் பரபரப்பு உருவானது .

பாபாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தக்கூடாது என வலியுறுத்தி புட்டபர்த்தியில் இருக்கும் சாய்பாபா,வின் தாய் ஈஸ்வரம்மா-சமாதியில், சூர்ய மாதா மற்றும் லஷ்மி சுவாமி என்ற இரண்டு

பெண்கள் திடீரென உண்ணாவிரதம் இருக்கபோவதாக கூறி அமர்ந்தனர்.

சாய்பாபாவின் தீவிரபக்தையான சூர்யமாதா, “நான் தியானத்தில்-இருக்கும்போது சாய்பாபா என்னுடன் அடிக்கடி பேசுவார். மே மாதம் 14ம் தேதி மீண்டும்-வருவேன், 96 வயதுவரை வாழ்வேன், அதுவரையிலும் எனது உடலை பாதுகாப்பாக வைத்திருக வேண்டும்’ என என்னிடம் பாபா தெரிவித்தார் எனவே, சத்யசாய் அறகட்டளையும் ஆந்திர அரசும் இறுதிச்சடங்குகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார் இவரது போராட்டத்தால் புட்டபர்த்தியில் பக்தர்களிடையே பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Tags:

Leave a Reply