கற்பழிப்பு குற்றங்களுக்கு  90 நாட்களுக்குள் விசாரணை 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை ஓடும் பேருந்தில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பு சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது . இதன் விளைவாக தற்போது நடை முறையில் இருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.

அதன்படி, கற்பழிப்பு குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 90 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்கப்பட்டுவிட வேண்டும்.என்றும் அதிகபட்சமாக குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் பரிசிலனை செய்யப்படுவதாக தெரிகிறது.

மேலும் இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டஒருவன் 18 வயதை அடைய சிலமாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளான். இதனையும் கருத்தில்கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட குற்றவாளிகள் இளம் சிறார் காப்பகத்துக்கு தண்டனைக்காக அனுப்ப படுவதை தவிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக தெரிகிறது.

அதன்படி 18 வயதை எட்டாதவர்கள் இளம் குற்றவாளிகள் என இருக்கும் தற்போதைய சட்ட நடைமுறைகளை திருத்தி 16 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கு வழங்குவது போல் சமதண்டனை வழங்கவும் விவாதிக்கபட்டு வருவதாக தெரிகிறது.

Leave a Reply