மோடி ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு வேலைகளை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் நடை
பெற்று வந்தாலும் அசாமிலும் அருணாச்சல பிரதேசத்திலும் அசுர வேகத்தில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.

சென்ற வருடம் தான் அருணாச்சல பிரதேசத்தையும் அசாமையும் இணைக்கும் வகையில சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்ம புத்தரா ஆற்றின் மீது கட்டபட்ட பூபன் ஹஜாரிகா பாலத்தை அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசமக்களுக்கு அர்ப்பணித்தார்.இந்த பூபன் ஹஜாரிகா பாலம் அசாமின் சடியாவையும் அருணாச்சல பிரதேசத்தின் டோலாவையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலம்.

இதனால் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு செல்வதற்கு இருந்த தொலைவு 175 கிலோ மீட்டர் தூரம் குறைந்து போனது. நேரமும் 4 மணி நேரம் மிச்சமானது. இது தான் இந்தியாவின் நீளமான பாலம் என்று இந்திய வரலாறு பதிவு செய்துள்ளது. ஆனால் இன்று மோடி திறந்துள்ள போகிபீல் பாலமோ ஆசியாவின் இரண்டாவது ரோடு ரயில் பாலம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. சும்மா இல்லைங்க.. ஆற்றின் மீது 5 கிலோ மீட்டர் தொலை விற்கு கட்டப்பட்துள்ளது இந்த டபுள் டக்கர் பாலம். இதில் ரயில்கள் செல்ல ஒரு பாலம். அதன் மேல் பஸ்கள் சரக்கு கன்ட்டைனர்கள் செல்ல ஒரு பாலம்.

இந்தியா வில் இப்பொழுது உள்ள ரயில் ரோடு பாலங்களில் நீளமான து எது என்றால் அது பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள திகா சோன்பூர் ரயில் ரோடு பாலம் தான் முதலிடத்தில் உள்ளது
இதன் நீளம் சுமார் 4.5 கிலோ மீட்டர்.வட கிழக்கு மாநிலங்களின் போக்குவரத்திற்கும், சரக்குகள், ராணுவ தளவாடங்களை வட கிழக்குப் பகுதிக்கு கொண்டு போகவும் இந்தப் பாலம் உதவும்.

இப்பாலத்தால் அஸ்ஸாமில் உள்ள டின்சுகுகியா விற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான தொலைவு சுமார் 500 கிலோ மீட்டர் குறைகிறது. அது மட்டுமல்லாது பயண நேரமும் சுமார் 10 மணி நேரமும் குறையும். இது
தாங்க தொலை நோக்கம் கொண்ட திட்டங்கள்.

1985 ம் ஆண்டிலேயே இந்தப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டாலும், 1997 ம் ஆண்டில் தான் அடிக்கல் அடிக்கல் நாட்டப்பட்டது என்றால் நாம் எவ்வளவு வேகமாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கல் நாட்டிய பிறகு சுமார் 5 ஆண்டுகள் தாங்கிய இந்த திட்டத்திற்கு சுமார் 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 2002 ல் இதன் வேலை
களை துவங்கி வைத்தது நம்முடைய வாஜ்பாய் அவர்கள் தான்.

வாஜ்பாய் காலத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் தூங்கத்தொடங்கிய இந்த திட்டத்தை மோடி பிரதமராக வந்த பிறகு துரிதப்படுத்தி நான்கே ஆண்டு களில் 5920 கோடிகளில் முடித்து வாஜ்பாய் பிறந்த நாளான இன்று திறக்க இருக்கிறார்.

ரோட்டில் பாலம் கட்டவே பல வருடங்களுக்கு தடவி
கொண்டு இருந்த இந்திய நிர்வாகம். இப்பொழுது ஆற்றின்மீது பாலம் கட்டுகிறது.அதுவும் பிரம்ம புத்தி ரா ஆற் றின் மீது இரு வழிச்சாலை ரயில் போக்கு வரத்துஅதன் மீது மூன்று வழிச்சாலை தரைவழிப் போக்குவரத்திற்கு பாலம் என்று மோடி ஆட்சியில் இந்திய நிர்வாகம் படு வேகமாக இருக்கிறது.

இந்துக்களின் புண்ணியபூமியான மானோசரோவ ரில் பிறந்து இந்தியாவை செழிப்பாக்க பாய்ந்து வரும் பிரம்மாவின் மகன் என்று அழைக்கப்படும் பிரம்ம புத்திரா ஆற்றின் சராசரி ஆழம் எவ்வளவு
தெரியுமா? 120 அடி.ஆழம்.இந்த நீரின்உயரத்திற்கு மேலே 5 கிலோ மீட்டர் தொலைவிற்குரயில் பாலம். அதன் மேலே பஸ் போக்கு வரத்து சூப்பர்ல..

பிரம்ம புத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டு அசாமை யும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் தோலா சடியா தரைவழிப்பாலமும் போகிபீல் ரயில் கம் ரோடு பாலமும் மோடி ஆட்சியின் சாதனைகளாக அசாமியர்களை அசர வைத்துள்ளது.அதனால் அசா மியர்கள்ஒரு காலத்தில் அசாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைத்து வைத்து ஆண்ட மன்னர் பீர்பாலின் மறு வடிவமாகவே மோடியை
பார்க்கிறார்கள்.

என்னடா. இது அக்பர் அரசவையில் இருந்த பீர்பால்எப்படி அஸ்ஸாம் மாநிலத்திற்க்குள் நுழைந்தார் என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். அக்பர் தோஸ்த் பீர்பாலுக்கும் அஸ்ஸாம் மாநிலத்திற்க்கு
ம் எந்த சம்பந்தமும் இல்லை. அக்பரோட ஆலோசகர் பீர்பால் இந்துவாக இருந்து கொண்டு இஸ்லாம் வளர வழிவகுத்தவர்.

ஆனால் நம்முடைய பீர்பால் சீனராக சு.என்கிற இடத்தில் பிறந்து டியான் என்கிற ஒரு மத வழிபாட்டு முறையில் வளர்ந்து இந்தியாவுக்கு ள் நுழைந்து இந்து மதத்தின் மீது பற்றுக்கொண்டு இபஹெனியா என்கிற தன்னுடைய பெயரை பீர்பால் என்று மாற்றிக்கொண்டு சுடியா என்கிற ஒரு பேரரசை இன்றைய அசாமில் உருவாக்கியவர்

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..வேற்று நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ள் நுழைந்தவர்கள் எல்லாம் தங்களுடைய மதங்களை இந்தியாவில் திணித்து கொண்டு இருந்த காலத்தில் கிபி 12 ம் நூற்றாண் டின் இறுதியில் இந்தியா வுக்குள் நுழைந்த பீர்பால் தங்களுடைய டியான் மதத்தை இந்தியா வுக்குள் திணிக்காது இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு அதை பரவ வைத்ததன் மூலமாக பீர்பாலும் சுடியா
அரசர்களும் இந்திய வரலாற்றில் இன்றும்போற்றப் பட்டுவருகிறார்கள்
.
கிபி 15 ம் நூற்றாண்டின் காலத்தில் இந்தியா முழுவதும் வேர் பிடித்து வளர ஆரம்பித்த இஸ்லாம் அஸ்ஸாம் அருகே எட்டிப் பார்க்க முடியாமல் நிற்க காரணம் சுடியா அரசர்கள் தான்.ஆனால் சுடியா
அரசர்களின் வீழ்ச்சிக்கு பிறகு அஸ்ஸாமை முழுமையாக ஆள துவங்கிய தாய்லாந்து வழியில் வந்த அகோம் அரசர்களின் காலத்தில் இஸ்லாமும் பௌ த்தமும் அஸ்ஸாமில் பரவ ஆரம்பித்தது
.
இஸ்லாமும் பௌத்தமும் அஸ்ஸாமில் நுழைந்தாலும் நரகாசுரன் காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்த சாக்தம் என்கிற சக்தி வழிபாட்டை இன்றும் அஸ்ஸாம் மக்களிடையே கொண்டு சென்ற வர்
கள் சுடியா அரசர் கள் தான். இந்தியாவின் முதல்சக்தி பீடமான காமாக்யா கோயில் அசாமில் தான்இருக்கிறது.

இப்படி சக்தி வழிபாட்டில் முன் நிற்கும் அசாமியர்கள் தங்கள் மண்ணின் அடையாளமாகவும் வீரமாகவும் ஒரு ராணியையும் வணங்கி வருகிறார் கள்.அவர் தான் பிருங்கானா சடி சதானி.சுடியா
வம்சத்தின் கடைசி ராணி. எப்படி ராணி பத்மாவதியும் கர்ணாவதியும் ராஜபுத்திரர்களால் போற்றசப் படுகிறார்களோ அதே மாதிரி ராணி சடி சதானியும் அசாமியர்களால் போற்றி வணங்க ப்படுகிறார்.

சுடியா அரச வம்சத்தின் கடைசி ராஜாவான நித்யபாலின் மனைவியான சடி சதானி அகோம்களுடான போரில் கணவரை இழந்த பிறகும் படை திரட்டிபோர்க்களம் சென்றவர்.போரில் தோல்வி அடைந்தபிறகு அகோம் அரசனின் அரண்மனைக்கு செல்ல விரும்பாது மானம் காக்க 1524 ம் ஆண்டில் ஏப்ரல் 21 ம் தேதி ரத்தினகிரி மலையின் உச்சியில் இருந்துகுதித்து உயிர் நீத்தார்.

இந்த நாளை அசாம் மாநில விடுமுறை தினமாகஅறிவித்து பிஜேபி அரசு கொண்டாடி வருகிறது.அதோடு ராணி சடிசதானி பெயரில் விருது அறிவி த்து அசாம் மக்களை கவுரவித்து வருகிறது. இப்பொழுது இன்னொரு சிறப்பு அம்சமாக ராணி சடிசதானியின் பெயரையே உலகம் போற்றும் இந்தபோகிபீல் பாலத்திற்கு மோடி சூட்ட இருக்கிறார்.

பாருங்கள்.. எங்கிருந்தோ சீனாவில் இருந்து வந்தபீர்பால் சுடியா வம்சத்தை நிறுவி அசாமில் இந்துமதம் சிறக்க பாடுபட்டார்.அதற்கு நன்றி கடனாக மோடி பீர்பாலின் வரலாற்றை உலகம் அறிந்து கொள்ளும்வகையில் அவரின் வழித்தோன்றல்களா ன ராணி சடிசதானியின் புகழையும் அசாமில் பெரு ம் பான்மையாக இருக்கும் சுடியா மக்களின் வரலா ற்றையும் உலகம் போற்ற எடுத்து செல்கிறார்.

மோடியின் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள்
அடைந்துள்ள வளர்ச்சிகளை கண்டு சுதந்திர இந்தியாவையும் வட கிழக்கு மாநிலங்களையும் அதிகமாக ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி வெட்கி தலை குணிய வேண்டும்.இதனால் தான் அசாமியர்கள் மோடியை சுமார் 800 வருடங்களுக்கு பிறகு தங்களை ரட்சிக்க வந்த மன்னர் பீர்பாலின் மறு வடிவம் என்றே போற்றி கொண்டாடுகிறார்கள்…

Tags:

Leave a Reply