அசாம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அசாமில் பாஜவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19ம் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.வடகிழக்கு மாநிலமான அசாமில் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. அசாமில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தருண்கோகய் முதல்வராக உள்ளார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக இவர் முதல்வராக பதவி வகித்துவருகிறார். அசாமில் காங்கிரசில் உட் கட்சிபூசல் நிலவி வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏக்.,கள் சிலர் கட்சியில் இருந்துவிலகி பாஜவில் சேர்ந்தனர். அசாம் காங்கிரஸ் கோட்டையாக விளங்கிவருகிறது. தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியாக இருந்த போடோமக்கள் முன்னணியும் விலகி விட்டது.

தற்போதைய சூழலை சரியாக பயன் படுத்தி அசாமில் ஆட்சியை பிடிக்க பாஜK திட்டமிட்டுள்ளது. அசாமில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜ முனைப்பு காட்டி வருகிறது. கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில பாஜ எடுத்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்தை பாஜ தொடங்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், கொராஜ்கரில் வருகிற 19ம் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதையடுத்து, கவுகாத்தியில் நடைபெறும் பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் மோடி பங்கேற்று வெற்றிவாய்ப்பு குறித்து விவாதிக்கிறார். அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிறப்பு நிதியை பிரதமர் அறிவிப்பார் என தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அசாம் சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தலை சந்திப்பது குறித்து மாநில பாஜ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அசாமில் உள்ள முக்கிய கட்சிகளுள் ஒன்றான போடோ மக்கள் முன்னணி, காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணியை முறித்து கொண்ட இக்கட்சி, வருகிற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜ முயன்று வருகிறது. 

Tags:

Leave a Reply