விஸ்வ ஹிந்துபரிஷத்தின் மூத்த தலைவர் மறைந்த அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் இறுதிமரியாதை செலுத்தினர்.

அசோக் சிங்காலுக்கு கடந்த 14-ந்தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக்சிங்கால் உயிர்பிரிந்தது. பின்னர் அசோக் சிங்கால் உடல் டெல்லி ஆர்எஸ்எஸ். தலைமைய கத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அசோக் சிங்காலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்ய வர்தன் ரத்தோர் மற்றும் பாஜக. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இறுதிமரியாதை செலுத்தினர்.

டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள மோடி கூறியுள்ளதாவது:- அசோக்சிங்கால் மறைவு தனக்கு பேரிழப்பு. நாட்டின் வளர்ச்சி்க்காக தன் வாழ்க் கையையே அர்ப்பணித்தவர் . அசோக்சிங்கால் அவர்களின் வாழ்த்துக்களையும், வழிகாட்டுதல்களும் எனக்கு எப்போதும் கிடைத்தது அதிர்ஷ்ட வசமானது. அசோக் சிங்கால் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாள ர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply