விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங் காலின் மறைவுக்கு பாபர் மசூதி இடிக்கப் பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் மூல மனுதாரரான ஹாஷிம் அன்சாரி இரங்கல்செய்தி வெளியிட்டுள்ளார்.

'பாபர் மசூதி வழக்கில் எங்களை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திவந்த போராளி அசோக் சிங்காலின் மறைவை அறிந்து மிகவும் துயர முற்றேன். தனி மனிதராக அயோத்தியா இயக்கத்தை அவர் ஆரம்பித்தார். அதில் ஏராளமான இந்து மக்களை இடம்பெறசெய்தார்.

ஆரம்பத்தில் பாஜக.வுக்கு இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்த  நிலையில் அவர் ஆரம்பித்த ராமஜென்ம பூமி இயக்கத்தின் பிறகு இன்று பாஜக. எம்.பி.க்களின் எண்ணிக்கை உயர்ந் துள்ளதை நாம் கண் கூடாக அறிய முடிகின்றது. அவரது மறைவு ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு பேரிழப்பாகும்' என ஹாஷிம் அன் சாரி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply