மகாராஷ்டிரத்தில் நீர்ப்பாசனத்திட்ட முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு எதிரான விசாரணை முடித்து வைக்கப்பட்டதாக வெளியானதகவலை ஊழல்தடுப்பு ஆணையம் (ஏசிபி) மறுத்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் அம்மாநில துணை முதல்வராகப் பதவியேற்றார். அமலாக்கத்துறை வழக்குகள் போன்ற அழுத்தங்கள் காரணமாக அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம் என ஒருதரப்பில் பேச்சுகள் எழுந்தது.

இந்நிலையில், நீர்ப்பாசன திட்ட முறைகேடு வழக்கில் அஜித்பவாருக்கு எதிரான விசாரணையை ஏசிபி முடித்து வைத்ததாக ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன.

இதையடுத்து, ஏசிபி தலைவர் பரம்பீர்சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக கிடைத்த புகார்களின்படி, சுமார் 2654 ஒப்பந்தங்களை விசாரித்துவருகிறோம். தற்போதைய வழக்குகள் 9 உட்பட மொத்தம் 45 விசாரணைகள் இன்று முடித்து வைக்கப்பட்டது. இது இயல்பான நடைமுறைதான். ஆனால், முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் ஏதும் அஜித்பவாருக்கு தொடர்புடையது அல்ல என என்னால் உறுதியளிக்க முடியும்” என்றார்.

Comments are closed.