அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், நாட்டின்வளர்ச்சி முழுமை அடையாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது; அதுமிகவும் விரைவாகவும், பரவலாகவும் இருக்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

பல்வேறு துறைகளில், குறிப்பாக ரயில்வே, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆகிய துறைகளில் எதிர் பார்த்ததைவிட, அதிக முன்னேற்றத்தை அடைந்துவருகிறோம். நம்முடைய வளர்ச்சிப் பயணம் மிகவும் சிறப்பானது. உலகப்பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள நிலையில், இந்தியாதான் நம்பிக்கை ஒளியை வீசிவருகிறது.

தொழில் துவங்குவதற்கான மிகச்சிறந்த நாடாக, இந்தியா, தொடர்ந்து விளங்குகிறது; இதற்கு தடை யாக இருந்த, லஞ்சம், ஊழல், நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன.


* புதுப்பிக்கத்தக்க மின்துறையில், 44 ஜிகாவாட் – ஒருஜிகாவாட் என்பது, 1,000 மெகாவாட் – மின் உற்பத்தி திறனை எட்டியுள்ளோம்
* சர்வதேச தரப்பட்டியலில், பல்வேறு பிரிவுகளில், முதல், ஐந்துஇடங்களில், எட்டு இந்திய விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன
* ரயில்வே, துறைமுகம், வீட்டுவசதி என, பல் வேறு துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அறிக்கையில் கூறியது 

Leave a Reply