அரசு அடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ என்ற அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் , தற்போது ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் மட்டுமே சாலைகள் போடப்படுவதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வர்த்தக சம்மேளனம் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போது ஒருநாளைக்கு ஒரு கி.மீ நெடுஞ்சாலை மட்டுமே உருவாக்கப் படுவதாகவும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 கிமீ நெடுஞ்சாலை அமைப்பதே அரசின்நோக்கம் என்று தெரிவித்தார்.

நமக்கு தேவையான எல்லாவசதிகளும் நம்மிடம் இல்லை. எனவே தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு நமக்கு தேவைப் படுவதாக குறிப்பிட்ட அவர், மிதக்கும்ஹெலிபேட், மற்றும் நீர்வழி போக்கு வரத்தின் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு நீர், கடல் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதற்காக பயோ டீசல், பயோ எத்தனால் போன்ற உயிரி எரி பொருள்கள் அரசுப் போக்குவரத்துத் துறை வாகனங்களில் விரைவில் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply