ஓராண்டிற்கு மட்டுமல்லாது, அடுத்த 10 ஆண்டுகளுக்கான திசையை காட்டக் கூடியது மத்தியபட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்பிரச்சாரத்தை கர்கர்டூமா என்ற இடத்தில் இன்று தொடங்கிய அவர், இளைஞர்கள், வர்த்தகர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள், பெண்கள் ஆகியோர் பட்ஜெட்டால் பயன் பெறுவார்கள் என கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்ப ட்டுள்ளதாகவும், தற்போதுதான் ராமஜென்மபூமி தீர்ப்பு கிடைத்திருப் பதாகவும், தற்போதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரசும். ஆம் ஆத்மியும் தூண்டி விட்டு வருவதாகக் குற்றஞ் சாட்டிய நரேந்திர மோடி, டெல்லி ஜாமியா, ஷாஹீன் பாக் பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் சாடினார். நாட்டை பல்வேறு துண்டுகளாக உடைக்கவேண்டும் என்று கூறுபவர்களை பாதுகாக்கும் கட்சிகளை, மக்கள் ஆதரிக்கக் கூடாது என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

Comments are closed.