அடுத்த 5 ஆண்டுகளில் 102 லட்சம்கோடி ரூபாய் மதிப்பில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சுதந்திரதின உரையின் போது, நாட்டின் உள்கட்டமைப்பு 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். பிரதமரின் அறிவிப்புக்கு இணங்க, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அடையாளம் காண்பதற்கான பணிகள் கடந்த 4 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

மிககுறுகிய காலகட்டத்தில், உள்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கான திட்டங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும், இவற்றின் மதிப்பீடு 102 லட்சம் கோடி ரூபாய் என்றும் அவர் தெரிவித்தார். இந்ததிட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்டநாடாக இந்தியாவை உயர்த்த முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Tags:

Comments are closed.