நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கும் வகையில் அணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், வழக்கொழிந்த 58 சட்டப் பிரிவுகளை நீக்கவும் இதுதொடர்பான சட்டதிருத்தம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும்,இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வழிவகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கியுள்ளது.