காவிரி ஆற்றின்குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முடிவுசெய்து அதற்கான வரைவு திட்ட அறிக்கையை தயார்செய்தது.  இதற்காக மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது.  இதற்கு தமிழக அரசு எதிர்ப்புதெரிவித்து இருந்தது.

 

 

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மேகதாதுவில் அணைகட்ட தமிழக பாரதீய ஜனதா கட்சியும் ஒப்புக்கொள்ளாது.  மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மட்டுமே நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

 

ஆனால் மேகதாதுவில் அணைகட்டுவது தொடர்பான விஷயத்தை பல்வேறு விஷயங்களுடன் இணைத்து வைகோ பீதி ஏற்படுத்துகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply