2016-08-13 நாகர்கோவில் : தமிழகத்தில் முதன் முறையாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் எக்ஸ்பிரஸ் சாலையாக குமரிமாவட்டத்தில் தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதையும் இணைக்கும் வகையிலும், பயணநேரத்தை குறைக்கும் வகையிலும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தங்கநாற்கர சாலை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தை கன்னியாகுமரியில் 2004ம் ஆண்டு அவர் தொடங்கிவைத்தார். இந்தியா முழுவதும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு விட்டாலும், திட்டம் அடிக்கல் நாட்டப்பட்ட குமரியில் மட்டும் 2005ல் திட்டமிடப்பட்ட இந்தசாலை அமைக்கப்படவில்லை.

இதனால் 70 கி.மீதொலைவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு செல்ல 3 மணி நேரத்திற்குமேல் ஆகிறது. எனவே தங்கநாற்கர சாலை அமைக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவந்தனர். எனினும் சிலரின் எதிர்ப்பால் இந்ததிட்டம் செயல்படுத்தப் படாமல் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் பா.ஜ ஆட்சி அமைந்த நிலையில் குமரியைசேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி. மத்திய தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து பழுதான தேசிய ெநடுஞ்சாலைகள் மட்டுமின்றி மாநில நெடுஞ்சாலைகள், தங்கநாற்கர சாலை, மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவிலில் மேம்பாலங்கள் அமைக்கவும், சுசீந்திரத்தில் பாலம் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார்.

இதனையடுத்து அனைத்து பணிகளும் தொடங்கிய நிலையில், தங்கநாற்கரசாலை திட்டம் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் சிலரின் கடும் எதிர்ப்புக ளிடையேயும் தொடர்ந்து நடைபெற்றது. இதன்படி காரோடு முதல் வில்லுக்குறி வரை 27கி.மீட்டர் தொலைவிற்கும், வில்லுக்குறி முதல் நாகர்கோவில்அப்டா சந்தை வரை 14, அப்டா சந்தை முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16 கி.மீட்டரும் சாலை அமைகிறது. (இங்கு கன்னியாகுமரி – நெல்லைதங்க நாற்கரசாலை இணைகிறது) அப்டா சந்தை முதல் முருகன்குன்றம் வரை 12 கி.மீ தொலைவிற்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

வில்லுக்குறி வரை 27.25 கி.மீ சாலை அமைக்க ₹1274.34 கோடியில் ஒருதிட்டமாகவும், வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி மற்றும் காவல் கிணறு வரை சாலை அமைக்க 42.703 கி.மீக்கு ₹1041.34 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கடந்த 19.01.2016ல் மார்த்தாண்டத்தில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவல் கிணறு அருகே பெருங்குடியிலும், முருகன் குன்றம் முதல் பொற்றையடி வரையிலும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. நேற்று முதல் வில்லுக்குறி அருகே குன்னக் குழிவிளையில், வில்லுக்குறி – காரோடு சாலைப் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.10 நாட்களாக காவல்கிணறு முதல் தோவாளைவரை சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.ஆரல்வாய் மொழி – குமாரபுரம் இணைப்பு சாலைவரை சாலைக்காக சமன்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. தற்போது தோவாளை – ராஜாவூர் இணைப்பு சாலைவரை சாலை சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் பொற்றையடி பகுதியில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வழுக்கம் பாறை வரைசாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஓரிருநாளில் இச்சாலைகள் அப்டா வரை அமைக்கப்படும். இச்சாலை 3 முதல் 5 மீட்டர் தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டு அதன்பின் முக்கால் அடி கனத்தில் கான்கிரீட் சாலையாக போடப்படுகிறது. ரயில்வே மேம்பாலங்களில் கான்கிரிட் அடித்தளம்கொண்ட இரும்பு பாலங்களாக இது அமைகிறது.

மெட்ரோ பாலிட்டன் நகரங்களான டெல்லி, மும்பையில் எக்ஸ்பிரஸ் சாலைகள் இருந்தாலும் சென்னையில் இதுவரை எக்ஸ்பிரஸ் சாலை இல்லை.தற்போதுதான் சென்னை – பெங்களூருசாலை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் குமரியில் தான் “எக்ஸ்பிரஸ் சாலை” முதன்முறையாக அமைகிறது. இதனால் ஏற்கனவே உள்ள பழைய சாலைகள் அப்படியே இருக்கும். இச்சாலைகள் மற்றும் ஊர்களுக்கு அணுகுசாலைகள் அமைக்கப்படும்.

24 மாதங்கள் இச்சாலை அமைக்க கால அவகாச மிருந்தாலும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிறுத்தலின்படி, 18 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பை எல் அண்ட் டி நிறுவனம் மூலம் காலைமுதல் இரவு 7 மணி வரை கூடுதல் பணியாட்கள் மற்றும் அதிக இயந்திரங்கள் உதவியுடன் பணிகள் நடைபெறுகிறது என இச்சாலை திட்ட இயக்குனர் முத்துடையார் மற்றும் நாகைமாவட்ட பொறியாளர் பிரதீப் ஆகியோர் கூறினர்.3 சுரங்கப்பாதையும், நவீன தொழில்நுட்பங்களும் நாற்கர சாலைதிட்ட இயக்குநர் முத்துடையார் மற்றும் பொறியாளர் பிரதீப் ஆகியோர் கூறியதாவது:

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரடிபார்வையில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.* வில்லுக் குறி பகுதியில் பெரியதொட்டி (நீர்)பாலம் அமைகிறது.* இச்சாலையில் 3 சுரங்கப்பாதைகள் அமைகின்றன. காரோடு பகுதியில் அமையும் சுரங்கப்பாதையில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க முதன்முறையாக “சாயில் நெய்லிங்” என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி மண்ணுக்குள் ரசாயன கலவை செலுத்தப்பட்டு, கெட்டித்தன்மை ஏற்படுத்தப்பட உள்ளது.* பள்ளியாடி – இரணியல் ரயில்நிலையங்கள் இடையே ரயில்வே மேம்பாலமும், தேரூர் மற்றும் தோவாளை பகுதிகளில் இருரயில்வே மேம்பாலங்களும் அமைகிறது.* குளப்புறம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைகிறது.

* பிரதான சாலை மற்றும் அணுகு சாலைகளின் இருபுறமும் தண்ணீர் தேங்காத வகையில் கான்கிரீட் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுகிறது.* நில அமைவியல் காரணமாக காரோடு பகுதியில் பழைய சாலை மேல் மட்டத்திலும், தங்கநாற்கர சாலை கீழ்மட்டத்திலும் அமைகிறது.* 437.05 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.* 28.440 கி.மீக்கு அணுகுச்சாலைகள் தார்ச்சாலைகளாக அமைக்கப்படுகிறது.* அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி நீர் ஆதாரங்களை பாதிக்காத வகையில் அதன் கரையோரம் சாலை அமைக்கப்படுகிறது. நீர் நிலைகளை நிரப்பாமல் புத்தேரி குளம் உள்பட அனைத்து குளங்களிலும் பாலங்கள் அமைக்கப்படுகிறது.* 4 இடங்களில் வாகன போக்குவரத்திற்கான கீழ்மட்ட சாலையும், 2 இடங்களில் மேல்மட்ட சாலையும், 8 இடங்களில் வாகனங்கள் செல்ல கீழ்மட்ட பாலங்களும், 6 இடங்களில் பாதசாரிகள் சாலையை கடக்க கீழ்மட்ட வழித்தடங்களும் அமைக்கப் படுகிறது.* 108 குறுபாலங்கள் (கல்வெர்ட்), 24 சிறு பாலங்கள், 2 சுங்கச்சாவடிகள்அமைகின்றன.* 9 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலை, 4 மீட்டர் சென்டர் மீடியன், 9 மீட்டர் அகலத்தில் மறுமார்க்க இரு வழிச்சாலை என அமைகிறது.பணியில் ஏற்பட்ட தடைகள்* தோவாளை பகுதியில் சாலைக்காக நிலம் கையகப்படுத்தியதும் அங்குள்ள மணல் மேடுகளை செங்கல்சூளைக்காக சிலர் தோண்டி ராட்சத பள்ளங்களாக மாறிவிட்டனர்.தற்போது இது சாலைஅமைக்க கூடுதல் சவாலாக மாறியுள்ளது.

* ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டாலும் இதற்கு முன்புஇருந்த முக்கிய அதிகாரி பணிகளை தொடங்க முட்டுக்கட்டை போட்டுள்ளார். 5 மாதங்கள் இதற்கானபணிகள் நடக்கவில்லை. எனவே அவரை மாற்றிவிட்டு தமிழகத்தை சேர்ந்தஅதிகாரி நியமிக்கப்பட்ட ஒரு மாதத்தில் அடிப்படை பணிகள் முடிந்து பணிகளும் மின்னல் வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன.* தெக்குமலை பகுதியில் சாலை அமைக்க முயன்றபோது வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதி தங்களுக்கு சொந்தம் என சாலை அமைக்க தடை விதித்தனர். இதனையடுத்து மாவட்ட வன அலுவலரிடம் ஆவணங்களை காண்பித்துஅது வருவாய்த்துறை புறம்போக்கு என்பதனை விளக்கியதை அடுத்து பிரச்னை முடிவிற்கு வந்தது.குமரிக்கு தனிச்சிறப்பு பொதுவாக தங்கநாற்கர சாலை உள்ள பகுதிகளில் பழைய சாலையும் தங்கநாற்கர சாலைக்குள் வந்து விட்டது.

எனவே கட்டணம் கட்டியே செல்ல வேண்டும். உதாரணமாக நான்குநேரி, திருநெல்வேலி செல்லவேண்டுமானால் பணம் கட்டாமல் செல்ல முடியாது. ஆனால் குமரியில் தங்கநாற்கர சாலைகள் முற்றிலும் புதிய தடத்தில் அமைவதால் பழைய சாலைகள் அப்படியே இருக்கும் என்பதால் பணம் செலுத்தாமல் பழைய சாலைகளிலும் பயணிக்கலாம்.சாலை எப்படி செல்கிறதுஎன்.எச்.47ல் மெதுகும்மல், குளப்புறம், குன்னத்தூர், நட்டாலம், வாள்வச்சகோஷ்டம், கப்பியறை, திருவிதாங்கோடு, இரணியல், வில்லுக்குறி, ஆளூர், திருப்பதிசாரம், நாகர்கோவில், தேரூர், இரவிப்புதூர், குலசேகரபுரம், தாமரைக்குளம் வழியாக கொட்டாரம் வரையிலும், என்.எச் 47பியில் நாகர்கோவில் திருப்பதிசாரம், தோவாளை, தெக்குமலை, ஆரல்வாய்மொழி, பெருங்குடி வழியாக காவல்கிணறு வரையும் சாலை அமைகிறது

Leave a Reply