தமிழக காங்கிரஸ்தலைவர் என்பதை மறந்துவிட்டு அதிமுகவின் ஒருஅணிக்கு தலைவர்போல் திருநாவுக்கரசர் செயல்பட்டு வருவதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

கேரளாவில் பணியாற்றும் தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரள அமைச்சர் மணியை கண்டித்து மூணாறில் இன்று தமிழ்பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதில் கலந்து கொள்வதற்காக மூணாறு செல்லும் வழியில் மதுரைவந்த தமிழிசை சவுந்தர்ராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் மிகச்சிறிய தவறுகளைக்கூட பூதாகரமாக்கி கருத்துதெரிவிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள், தமிழ்பெண்களை இழிவுப்படுத்தி பேசிய கேரள அமைச்சரை கண்டிக்காதது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பினார். 

இரட்டைஇலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக கைதாகியுள்ள டிடிவி தினகரன் தேசத்துரோக குற்றமா செய்து விட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதை சுட்டிக் காட்டிய தமிழிசை சவுந்திரராஜன், திருநாவுக்கரசர் அதிமுகவின் ஒருஅணிக்கு தலைவர் போல் செயல்படுவதாக விமர்சித்தார்.

Leave a Reply