அதிமுக, தமிழ்மாநில காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

 

மக்களவைதேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமாகா தலைவர் ஜிகே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர் இருந்தனர்.

 

மேலும் தமிழகத்தில் 21 சட்டப்பேரவை இடங்களுக்கும் அதிமுகவுக்கு தமாகா முழுஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணி பங்கீடு புதன்கிழமை இறுதியானது. தமிழகம் மற்றும் புதுவைசேர்த்து மொத்தமுள்ள 40 இடங்களின் தொகுதிப்பங்கீடு விவரம் பின்வருமாறு:

அதிமுக – 20, பாமக – 7,  பாஜக – 5, தேமுதிக – 4, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், தமாகா மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியகட்சிகளுக்கு தலா ஒருதொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply