நாகர்கோவிலில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் செலவுக்கான பணத்தை கொண்டுசெல்ல அரசு வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது பணம்படைத்தவர்கள், தங்களின் வசதிக்கேற்ப உருவாக்கிக் கொள்வதுதான். அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணி வெற்றிபெற்றால் தமிழகம் மீண்டும் இருண்டகாலத்தை நோக்கிச் செல்லும்.

கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேசிவருகிறது, நாளை அல்லது நாளை மறு நாள் இறுதிமுடிவு எட்டப்படும். அதன்பின் பாஜக.,வின் அடுத்தவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தே.மு.தி.க – மக்கள் நலக்கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொருகருத்து உள்ளது. இந்த கூட்டணி தேர்தல்வரை நீடிக்குமா என்பதே சந்தேகம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply