''அதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்கமுடியும்,'' தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: ஆர்கே.நகர் தொகுதி யில், பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன், வெற்றிபெறுவார்; பெருமளவு ஓட்டு வித்தியாசத்தில், மக்கள் வெற்றிபெற வைப்பர். 'இரட்டை இலை சின்னத்தை, ராஜாவும், தமிழிசையும் முடக்க முயற்சிக்கின்றனர்' என, அதிமுக., செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியுள்ளார்.அ.தி.மு.க.,வினர் எங்களைபார்த்து பயந்துள்ளனர். அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்க முடியும். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையில், இது ஒரு வெற்றுப்பேச்சு.'நியூட்ரினோ' உள்ளிட்ட திட்டங்களுக்கு தடை வாங்கினால், தமிழகம் எப்படி முன்னேறும். விவசாயிகள் நலனில், மாநில அரசு அக்கறை காட்டவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply