இந்திய விமானப்  படை நடத்திய அதிரடித் தாக்குதலைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, பாஜக தலைவர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புப் படையினரையும் அவர் பாராட்டியுள்ளார்.
 
இந்திய விமானப் படை மற்றும் ராணுவத்தின் அதிரடித்தாக்குதல் தொடர்பான செய்தி வெளியானதும் டிவிட்டரில் வாழ்த்துதெரிவித்து செய்தி போட்டார் அமித் ஷா.
 
இது குறித்து அவர் போட்ட டிவிட்டில், பிரதமர் நரேந்திரமோடியையும், இந்திய ராணுவத்தையும் இந்த தாக்குதலுக்காக பாராட்டி வாழ்த்து கிறேன் , தான் காயப்படாமல் எதிரிகளுக்கு மட்டும் பெரும்நஷ்டத்தை ஏற்படுத்திய இந்திய ராணுவத்தின் செயல் பாடுகள் போற்றுதலுக்குரியது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியானதாக்குதல் இது என்றும் கூறியுள்ள அவர் நாட்டைக்காக்கும் பொறுப்பு ராணுவத்திடம் உள்ளதையும் கூறியுள்ளார்.இந்தியாவைப் பாதுகாப்பாக உணர வைத்துவிட்ட மோடியை பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார் அமித் ஷா.

 

 

Leave a Reply