அமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளில் 29 மே பயணம் செய்தார். முந்தைய அரசுக்கு கவலை இல்லாது இருந்த இந்த பகுதியால் இதற்க்கு மிக அருகில் உள்ள பர்மா (மியன்மாருக்கு) சொந்தமான கோகோ தீவுகளில் 1992 ஆம் ஆண்டு சைனா SIGINT தகவல் சேகரிக்கும் நிலையம் அமைத்தது.இந்தியாவின் அந்த பகுதியில் உள்ள கடல் நடமாட்டம்களை கண் காணிக்க திட்டம் தீட்டியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியை கண் காணிக்க அங்கே அமைப்பை ஏற்ப்படுத்தியது.

நமக்கு இங்கே 2ஜி 3ஜி யில்தான் கவனம். மோடி வந்ததும் மயன்மார், பங்களாதேஷ் நட்புறவு
இந்தியன் கடற்ப்பகுதியில் நமக்கு உள்ள உரிமையை நிலை நாட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைவருக்கும் தெரியும்.

அதன் மற்றுமொரு பகுதி நம் நாட்டுப் பரப்பான அந்தாமான் – சைனா கண்காணிப்பு எல்லையில் இருப்பதால் வரக்ககூடிய ஆபத்து. அதற்க்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை துவங்கிவிட்டது. தற்போது கோகோ தீவுகள் அருகில் உள்ள அந்தமான் தீவுகளின் வட முனையில் ஒரு ராடார் மையம், ராணுவ போர்க்கப்பல் துறைமுகம், கப்பல் படை தளம் அமைத்துவிட்டது. சைனா கலங்குகிறது. இதெல்லாம் நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்.

நம் நாட்டின் வளர்ச்சியுடன் நம் நாட்டு எல்லைகளில் அந்நியர்கள் எவ்வாறு ஆதிக்கம் செய்கின்றனர். எந்த வித ஆபத்து உள்ளது என்று மோடி கவனித்தார். காங்கிரஸ் போல் இவர் ஒன்றும் இடாலியிடம் இருந்து உத்தரவு வேண்டும் என்று இருப்பவர் இல்லையே.

ரூ.10 ஆயிரம் கோடி சிலவில் அங்கே கப்பல்கள் பழுது பார்க்கும் துறை, மற்றும் கடல் வழி துறைமுக முக்கியத்துவ அபிவிருத்தி ஏற்படுத்த திட்டம் செயல் படத் துவங்கி விட்டது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த பகுதி பூர்வ குடி களுக்கு அவர்களுடைய பாதுகாப்புக்கு நடவடிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


அந்தமானின் சுமார் 572 தீவுகளுக்கும் கடல் வழி போக்குவரத்தை பெருக்க தக்க கப்பல்கள் பெற நடவடிக்கை நிதின் கட்கரி எடுத்துள்ளார். இயற்கை வளம்களை காக்கும் வகையில் சுற்றுலா மையங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

உலக நாடுகளில் இருந்து பலரும் வரும் தாய்லாந்தின் "புக்கேட்டும்" மிக அருகில்தான் இருக்கின்றன சிங்கபூர், மலேசியாவில் இருந்து தினமும் இங்கே சுற்றுலா சொகுசு கப்பல்கள் வருகின்றன. அந்தமான் தீவுகளின் வட முனையில் இருந்து மிக அருகில் உள்ளது மியான்மார். கொஞ்சம் திட்டமிட்டால் அந்தமானும் வளர்ச்சி அடையும், இந்திய வர்த்தகமும் பெருகும், நமக்கும் இந்த தீவுகளுக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகமாகும். அந்தமான் தீவுகளில் 90 சதவிகித இடம் இயற்க்கை வனம்கள் பராமரிக்கப்படுகின்றன.

இத்தனை நாட்கள் நாம் கவனிக்காமல் இருந்ததால் சைனாவின் ராணுவக் கப்பல்கள் இங்கே மீன் பிடி படகுகள் போல் நடமாடுகின்றன. இங்கே உள்ள அதிகாரிகளும் மிக மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வந்தனர். சமீபத்தில் மலேசியாவின் விமானம் MH 370 விழுந்து நொறுங்கியபோது, அந்த விமானம் பற்றி எதாவது தகவல் அந்தமானில் உள்ள ராடார் கருவியில் உள்ளதா என்றால், அவர்கள் நாங்கள் அந்த கருவியை அனைத்து வைத்து இருந்தோம் என்றார்கள். இப்படி ஒரு நிலை இருந்தால் ராடார் கருவியைக் கூட இயக்காமல் இருந்தால், நமக்கு அங்கே என்ன பாதுகாப்பு இருக்கும். இப்போது நிலைமை மாறி விட்டது.

தற்போது மிக நவீன தொழில் நுட்ப ராடார் பொறுத்த மோடி அரசு உத்தரவு இட்டது சைனாவின் நடமாட்டத்தை குறைத்துள்ளது

நன்றி ராஜகோபால்

Leave a Reply