மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. அனில் மாதவ் தவே அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தேசப் பணிக்காக தன் குடும்பத்தை விட்டு முழு ஈடுபாடுடன் பணியாற்றியவர். முழுமையான அர்ப்பணிப்பு, சிறந்த சிந்தனை, பிரச்சனையை எளிதில் புரிந்து கொண்டு தீர்வு காணுதல் ஆகியவை அவரது சிறப்பு இயல்பு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது ஒரே நாளில் 3 முறை அவரை சந்தித்திருந்தேன். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்திட தனது முழு ஆதரவையும் வழங்கி, இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெற தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவரின் இழப்பு பேரதிர்ச்சியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், நம் தமிழ் சொந்தங்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் புண்ணிய ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

–              பொன். இராதாகிருஷ்ணன்  

Leave a Reply