இந்தியாவில் அனைத்து அவசர அழைப்பு களுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் காவல் துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என  பல்வேறு எண்கள் அவசர அழைப்பு களுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் எந்தஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல் படுத்தி வருகின்றன.

எனவே இந்தியாவிலும் அனைத்து அவசரகால உதவி அழைப்புகளுக்கும் அமெரிக்காவில் இருப்பதுபோன்று ஒரே எண்ணை அறிவிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் தற்போது 112-ஐ இந்தியாவின் தேசிய அவசர எண்ணாக கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் புதிய அவசரஹாட்லைன் எண்ணான 112-ல் காவல்துறை(100), தீயணைப் புத்துறை(102), ஆம்புலன்ஸ்(103) மற்றும் அவசரபேரிடர் மேலாண்மை(108) ஆகியவற்றின் எண்களும் சேர்க்கப்படும். போகப்போக அனைத்து அவசர உதவி எண்களும் 112 உடன் ஒருங்கிணை க்கப்படும் என்றும் இந்தசேவை ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply