அனைத்து மதங்களையும் மதிக்கவேண்டும் , அகிம்சை கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்
வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட பல்வேறு மதங்கள் உள்ளன. ஆனால், மக்கள் தங்களுடைய சொந்தமதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் இங்கு சுதந்திரம் உள்ளது.

இறைவனை பல்வேறு வடிவங்களில் வழி படலாம் என்று இந்திய தத்துவஞானிகள் கூறுகின்றனர். உலக நன்மையையே அனைத்துமதங்களும் வலியுறுத்துகின்றன என்பதால், அனைத்து மதங்களையும் மதிப்பது அவசியமாகும். இந்தக்கருத்தை முழுமூச்சுடன் உலகுக்குத் தெரிவிக்கவேண்டும்.

மதம், சம்பிரதாயம் ஆகிய சொற்களின் அர்த்தங்கள் குறித்து உலகில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. இரண்டும் வெவ்வேறு கொள்கைகளாகும். நமது கடமைகளை நிறைவேற்றுவது குறித்தும், அவற்றில் அடங்கியுள்ள நமது உரிமைகள் குறித்தும் மதங்கள் நமக்குகற்பிக்கின்றன.

மதங்களின் பெயராலும், சம்பிரதாயங்களின் பெயராலும் நம்மிடையே பிளவுகள் ஏற்பட்டதால், மதங்களின் கருத்துகள் மறைந்து பிரிவுகள் அதிகரித்தன. நமது சொற்களாலும், செயல்களாலும் பிறரை காயப்படுத்தாத அகிம்சை கொள்கையை நாம் பின்பற்றவேண்டும்.

இந்தியாவில் தோன்றிய பல்வேறு அறிவுஜீவிகள், தத்துவ ஞானிகள் ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கியதே ஹிந்து என்ற வார்த்தையாகும். ஹிந்து என்ற வார்த்தையை குறிப்பிட்ட பிரிவினருடன் இணைத்து பார்க்கும் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகள் இருந்தால், பிரச்னைகளுக்கான காரணங்கள் காணாமல் போய்விடும்.

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி

Leave a Reply

Your email address will not be published.