"அனைத்து மாநிலங்களிலும் குறைந்த பட்சம் ஒரு ரயில் நிலையத்தையாவது தனித்துவமிக்க கட்டமைப்புடன் புதுப்பிக்கவேண்டும். குறிப்பாக, பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக ரயில் நிலையங்களை மேம்படுத்தவேண்டும்' என அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தினார்.

 நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது காணொலி முறையில் ஆலோசனை நடத்திவருகிறார். "பிரகதி' என்ற பெயரிலான இந்த கூட்டத்தின் ஒருபகுதியாக, 10-ஆவது ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தில்லி, மிúஸாரம், உத்தரகண்ட்,ஒடிஸா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம்,  ஹிமாசல பிரதேசம், சண்டீகர் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மத்திய நெடுஞ்சாலைப் போக்கு வரத்து அமைச்சக அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

 அப்போது பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வுசெய்ததுடன், அவற்றை விரைவாக நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

 ரயில் நிலையங்களை புதுப்பிப் பதற்கான திட்டங்கள் குறித்த நிலவரங்களை மோடி கேட்டறிந்தார். குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் ஒரு ரயில் நிலையத்தையாவது புதுப்பிக்கவேண்டும் என மாநில தலைமைச் செயலாளர்களிடம் மோடி அறிவுறுத்தினார்.

 நெடுஞ்சாலைகள் தொடர்பாக பொது மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள், குறைகள் தொடர்பான விவரங்களை மோடி கேட்டறிந்தார். இப்பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு அந்த அமைச்சக அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

 மேலும், தலைமை செயலாளர்கள் தங்களுடைய மாநிலங்களில் உள்ள அரசு அலுவலக ங்களில் சூரிய மின் சக்தி வசதிகளை உருவாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் மோடி எடுத்துரைத்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply