சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது ஒரு பெண்மனி வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

சர்வ சமயப் பேரவை— செப்டம்பர் 1893:

1893ம் வருடம், செப்டம்பர் 11ம் நாள் திங்கள் கிழமை சர்வ சமயப் பேரவைக் கூடியது. அந்தக் குழுத்தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000 பேர்களைப் பார்த்தும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் “அமெரிக்க சகோதரி சகோதரர்களே” எனக் கூறி தன் உரையைத் துவங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து 2 நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் 7000 பேர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி எற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார். சுவாமிஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளி வந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *