அன்று தங்கநாற்கர சாலை மட்டும் அல்ல… தங்கச்சுரங்கமும் தயார் செய்தோமுங்க…. சொன்னா நம்ப மாட்டீங்களே…அபுதாபி எண்ணெய் நிறுவனம் இந்தியாவின் நிலத்தடி சுரங்க கிடங்குகளில் கச்சா எண்ணெயை சேர்த்து வைக்கவும், அதில் 2/3 பங்கை இலவசமாக தரவும் தயார் என்ற தகவலைப் 3 நாளைக்கு முன்னாடி பார்த்தோம் இல்லையா?! இந்தியாவில் அவ்ளோ பெரிய சுரங்கங்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம்.


உலக கச்சா எண்ணெய் தேவையில் இன்று இந்தியா அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து மூன்றாவது நிலையில் உள்ளது. ஏதோ காரணத்தால் சப்ளை தடைப்பட்டால் காங்கிரஸ் கருமங்கள் என்ன செஞ்சு இருக்கும்னு கற்பனை செய்ய முடியுதா உங்களால? நம்ம முரளி டியோரா மாதிரி ஒரு ஆள் உலகம் முழுக்க பறந்து, பேரம் பேசி, கூடவே ஒரு கமிஷனையும் பேசி, அதை அப்படியே வெளிநாட்டு வங்கிக்கு அனுப்பி வச்சுட்டு, நிச்சயமா எப்படியாவது வாங்கிகிட்டு வந்து இருப்பார். ஆனா அன்றைய விலையை போல இல்லாமல் விலை கூடி அது வந்து இருக்கும். மக்களுக்கு தானே கஷ்டம்.

1999 வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு பாரதத்தின் எரிபொருள் தேவையில் அவசரநிலையை சமாளிக்க காங்கிரஸ் கருமங்கள் போல் இல்லாமல் தன்னிறைவு இல்லையென்றாலும் சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்து நாட்டின் கிழக்கு, மேற்கு கடற்பகுதிகளில் உருவாக்கியதுதான் இந்த கச்சா எண்ணெய் சேமிப்பு சுரங்கங்கள். இதைத்தன் தற்போது அபுதாபி எண்ணெய் நிறுவனம் தான் உபயோகிக்க அளிக்குமாறு கேட்டுள்ளது. அதற்கு பிரதி உபகாரமாக 2/3 பங்கு எண்ணெயை நாம் உபயோகித்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.


இதற்க்கான ஆரம்பகட்ட வேலைகள் 2003ல் துவங்கப்பட்டு, சுமார் 3200 கோடிகள் செலவில் சுரங்கங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய குறைந்த விலையில் கூட சுமார் 11500 கோடிகள் மதிப்பிலான கச்சா எண்ணெயை சேமித்து வைக்கும் விதத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சுரங்கங்களின் அளவு பெரிதாக்கப்பட்டு 132 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு கொள்ளளவு இருக்கும் வரையில் 2020க்குள் முடிக்கப்படும் என்கிறது அரசு.

11500 கோடிகள் சேமித்து வைக்கப்படக் கூடிய இடத்தில் 2/3 பங்கு இலவசம்னு சொன்னா யோசிச்சுக்கோங்க…

இதுக்குதான் வாஜ்பாய் போன்ற தீர்க்கதரிசனமும், மோடி போன்ற சமயோஜித புத்தியும், யுக்தியும் வேணும்ங்கறது…

தேசாபிமானம் இருந்தால் மட்டும் தானே அதுசார்ந்த தீர்க்க தரிசனமும் வரும் இல்லையா!!!!
படங்களில் மாமேதை வாஜ்பாயின் கனவு நனவாகும் காட்சிகள்…


Thanks to Kalyan Raman ji…

Tags:

One response to “அன்று தங்கநாற்கர சாலை மட்டும் அல்ல… தங்கச்சுரங்கமும் தயார் செய்தோமுங்க”

  1. C.Sugumar says:

    பல்லி விழும் பலன்கள் எனற பகுதியை தயவு செய்து நீக்க வேண்டுகின்றேன்.இது போன்ற விசயங்களை மக்கள் மறக்க வேண்டும்.

Leave a Reply