மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவை துடியலூரில் பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்தார். அப்போது சசிகுமார் இறுதி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக கைது செய்யப் பட்டவர்களின் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக கொண்டபின் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் கொலைசெய்யப்பட்ட இந்துமுன்னணி பிரமுகர் சசி குமார் இறுதி ஊர்வலத்தின்போது நடைபெற்ற கலவரத்தில் அப்பாவிமக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில் 500-க்கும் மேற்பட்டோரை கைதுசெய்து உள்ளனர். இதில் துடியலூர் பகுதியில் 300 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ததை நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அப்பாவி மக்களை கைதுசெய்தது கண்டனத்துக்குரியது.போலீசார் விசாரணை நடத்தி நிரபராதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.