மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக கொரோனா வைரஸ்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்றவாரம் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்க பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்சோர்வு மற்றும் உடல்வலி இருந்ததாக அமித்ஷா கூறி வந்ததைத் தொடர்ந்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக எய்ம்ஸ் தரப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துமனையின் ஊடகப் பிரிவு தலைவர், மருத்துவர் ஆர்த்தி விஜ், “கடந்த 3 – 4 நாட்களாக உடல்சோர்வு குறித்தும் உடல் வலி குறித்தும் கூறிவந்தார் அமித்ஷா. அவருக்கு கோவிட்-19 நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. கோவிட்கேருக்காக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்க பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே தன்பணிகளை செய்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.