பா.ஜ.க., அகில இந்திய தலைவர் அமித்ஷா வருகிற 4–ந் தேதி மதுரையில் பிரசாரம்செய்கிறார். இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பா.ஜ. க., வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1–ந் தேதி (நாளை) மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 4–ந்தேதி அகில இந்திய தலைவர் அமித்ஷா மதுரை, கன்னியா குமரி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம்செய்து பேசுகிறார்.

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 6 மற்றும் 8–ந் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடுவார் இவ்வாறு அவர் கூறி னார்.

Leave a Reply