அமெரிக்க நாராயணன் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரசிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்
(ரோஷம் – மானம் – சூடு – சொரணை இருந்தால்)

தந்தி டிவி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொய்மூட்டை நாராயணன் குற்றச்சாட்டுக்கு பதில் வீடியோவை பாருங்கள் – அயல் நாட்டிலிலிருந்து, கருப்பு பணத்தை, 100 நாட்களில், மீட்டுக் கொண்டுவருவேன் என்று, காலகெடுவும் விதிக்கவில்லை; “ஒவ்வொருவர்” வங்கி கணக்கிலும், ரூ.15 லட்சம் டெப்பாசிட் செய்வேன் என்று, சத்தியமும் செய்யவில்லை.
.
விடியோவை காணுங்கள். “ கருப்பு பணத்தை கொண்டு வரவேண்டுமா இல்லையா? இது உங்களுக்கு உரிமையானதா, இல்லையா? ஒவ்வொரு பைசாவையும் மீட்டுக் கொண்டுவர வேண்டுமா, இல்லையா? “, என்று கேள்விகள் எழுப்பி, "ஆம்" எனும் பதிலை, மக்களிடமிருந்து பெறுகிறார்.
.
“ ஒவ்வொரு “ஏழை”க்கும், ரூ.15 லட்சம் தரக்கூடிய அளவுக்கு, அயல்நாட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது”, என்று தன் உத்தேச மதிப்பீடை சொல்கிறார். இம்மதிப்பீடை சொல்லும்போது கூட, ஒவ்வொரு “ஏழை”க்கும், என்கிறாரே தவிர, “ஒவ்வொருவரு”க்கும், என்று சொல்லவில்லை.
.
.
“ மக்களுடைய பணம்; ஏழைகளுடைய பணம்; விவசாயிகளுடையது; உழைப்பாளிகளுடையது. ஹிந்துஸ்தானத்துக்கு உரிமையான பணம்; பல கோடி ஏழை மக்களுக்கு உரிமையான பணம். “ என்பதால், இது மக்கள் நல்வாழ்வுக்கு பயன்படுத்தப்படும், என்கிறார்.
.
.
நன்றி: இந்த விடியோவை தந்து உதவிய ஐ.ஐ.டி. மக்களுக்கு.
.
உண்மை நிலையை அறியாது, சந்தேகம் கொண்டவர்களுக்கு, சந்தேகத்தை தீர்த்து உதவ, இந்த விடியோ பதிவிடப்படுகிறது..
.
உண்மை நிலையை அறிந்திருந்தும், அவதூறு பரப்புபவர்களுக்கு, — “ இந்த விடியோவை பார்த்திருப்பார்களோ? நம் மீது காரித் துப்புவார்களோ?”, எனும் அச்சத்தை எழுப்ப, இந்த விடியோ, இங்கு பதிவிடப்படுகிறது.
.
.
நண்பர்கள் அனைவருக்குமான வேண்டுகோள்: இந்த விடியோவை, அனைவரும், தத்தம் முகநூல் பக்கத்தில், ஒரு முறை, பதிவு செய்து வைக்குமாறு வேண்டுகிறோம். மு.மு., சிக்யூலர் கூட்டம், அடங்கி ஒடுங்க உதவும்.

நன்றி SR சேகர்

பாஜக மாநில பொருளாளர்
.

Leave a Reply