நக்சலைட்கள் – கலவரக்காரர்கள் – தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் நம் ராணுவப் பிரிவினருக்கு இதுவரை இல்லாத — அமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்த பாதுகாப்பு கவச உடை, தலைக்கு கவசம் வாங்குகிறது மத்திய அரசு. இந்த தலைக்கவசம்கள் 20 மீட்டர் தூரத்தில் இருந்து சுட்டாலும்கூட 7.62 mm / 9 mm புல்லெட்களை எதிர்கொள்ளக்கூடிய திறனுள்ளது. இந்த ஹெல்மட்டுகளில், இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்கக்கூடிய கண்ணாடிகள் / ஒளி விளக்கு (torch) மற்றும் தகவல் தொடர்புக்கு ""வாங்கி டாக்கி"" பொருத்துக்கூடிய வசதி உள்ளது.
மத்திய பாதுகாப்பு படையினர் சுமார் 3.5 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் வசம் 2000 மட்டுமே குண்டு துளைக்காத தலைக்கவசம் உள்ளது.

எல்லை பாதுகாப்புப் படையினர் 2.5 லட்சம் பேர் உள்ளனர் — இவர்கள் வசம் 500 மட்டுமே உள்ளது. இவர்கள் இந்திய பாக்கிஸ்தான் எல்லையிலும், இந்திய பங்களாதேஷை எல்லையிலும் பணி புரிகின்றனர்.

இதுவரை நமக்கு யானை வாங்க காசு இருந்தது, அங்குசம் வாங்க வழியில்லை என்ற நிலை —
இப்போது என்ன நிலைமை – இந்த உயர்தர உடற்கவசம், தலைக்கவசம் இப்போது 10 லட்சம் நம் வீரர்கள் பெறப்போகிறார்கள்.

உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்க் இதற்க்கு அனுமதி வழங்கியுள்ளார்.

வாங்குகிறது மத்திய அரசு. வாழ்க வலுவான பாரதம்

Leave a Reply