இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் இம்மாதம் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ், பாகிஸ் தானின் மஹ்மூத் குரேஷியும் பங்கேற்கின்றனர். இதில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை துவங்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்தகடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஐ.நா., கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

Leave a Reply