அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக என் உயிரைக் கூட கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டில்இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த பா.ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இதையடுத்து, டெல்லியில் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் உமாபாரதி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது என்பது எனது கனவு. அயோத்தில் ராமர்கோயில் கட்டுவதற்காக சிறை செல்லவும், தூக்கில் தொங்கவும் நான்தயார். இன்று இரவு நான் அயோத்தி சென்று ராமர்கோயிலில் ஆசிபெற இருக்கிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் எனதுபெயர், பங்கு இருக்கிறது என்பதை நான் பெருமையாக நினைக்கிறேன், இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கோரப்போவதில்லை. ராமர்கோயில் கட்டுவதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். இதற்காக எத்தகைய தண்டனைகள் அளித்தாலும் அதை எதிர்கொள்ளத்தயார்.

என் மீது சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நான்மறுக்கிறேன். நான் எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. அனைத்தையும் நான் வெளிப்படையாகவே செய்தேன். ராமர்கோயில் கட்டும் பிரசாரத்தை நான் பெருமையாக, நம்பிக்கையுடன்தான் செய்தேன். தேசியக்கொடியின் நலனுக்காக நான் எனது முதல்வர் பதவியை துறந்தவள் என்பது உங்களுக்குதெரியுமா.

ராமர்கோயில் கட்டுவதற்காக என்னால் என்ன முடியுமோ அதை நான்செய்வேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இதை தடுப்பதற்கான சக்தி யாருக்கும் இல்லை.  சீக்கியர்களுக்கு எதிரானபோராட்டம் நடக்கும் போது சோனியாகாந்தி ராஜீவ்காந்தி இல்லத்தில் இருந்தார். அதற்காக சீக்கியர் போராட்டத்தில் சதித்திட்டம் தீட்டினார் என்பதாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply