முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அயோத்தியல்ல, மெக்காதான் என மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார். 

அயோத்தி வழக்கில், இஸ்லாம்ற்கு இன்றியமையாத பகுதியாக மசூதியைக் கருதமுடியாது என்று 1994ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற கூறியதை மறுபரிசீலனை செய்யக் கோரியும், இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரியும் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. 

இதில் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 3 பேரில் இரண்டு நீதிபதிகள் , அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று கூறியதால் அதுவே தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது. “1994ம் ஆண்டு தீர்ப்பு நிலம் கையகப் படுத்துதல் சம்பந்தமானதே தவிர, அது மதம் சம்மந்தமானது அல்ல. ஆதாரங்கள் அடிப்படையில் சிவில்வழக்கு முடிவு செய்யப்பட வேண்டும். 1994ம் ஆண்டு தீர்ப்புக்கும் தற்போதையை வழக்குகளுக்கும் தொடர் பில்லை” என நீதிபதிகள் கூறினர். 

மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்குசொந்தம் என்ற மூல வழக்கில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. துணை வழக்கு முடிவுக்குவந்த நிலையில், மூல வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் உமாபாரதி கூறுகையில், “இது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். அயோத்தி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நான் வரவேற்கிறேன். விரைவில் தீர்ப்புவரும் என நம்புகிறேன். தற்போது, எல்லா விவகாரங் களையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த விவகாரத்தை நீதி மன்றத்தில் வெளியே தீர்த்து இருக்க முடியும். அயோத்தி என்பது இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல. அவர்களுக்கு மெக்காதான் புனித இடம்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *