திரு. அய்யாகண்ணு அவர்களே உங்கள் போராட்டம் இப்படி அல்லவா இருந்திருக்க வேண்டும்.

1 தமிழக அரசே ஆந்திர அரசு போல நதிகளை இணை!!!

2 தமிழக அரசே குஜராத் அரசு போல தடுப்பணைகள் கட்டு

3 தமிழக அரசே கர்நாடக அரசு போல அணைகள் கட்டு!!

4 தமிழக அரசே கேரளா போல மணல் அள்ளுவதற்கு தடை விதி !!!

5 தமிழக அரசே உத்திரபிரதேச அரசு போல விவசாயிகளுக்கு சாண உரம் மற்றும் பால் மூலம் மாற்று வருவாய் வழங்கும் பசுக்கள் வதையை தடை செய் !!!

6 தமிழக அரசே ராஜஸ்தான் அரசு போல சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர் !!!

7 தமிழக அரசே மத்திய பிரதேச அரசு போல மண் பரிசோதனையை விவசாயிகளுக்கு வழங்கு !!!

8 தமிழக அரசே மகாராஷ்டிரா அரசு போல வறட்சியில் காப்பீடு பெரும் திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்கு கொண்டு சேர்!!!

9 தமிழக அரசே சிக்கிம் அரசு போல ஆர்கானிக் விவசாயத்திற்கு ஆதரவு கொடு !!!

10 தமிழக அரசே சட்டிஸ்கர் அரசு போல ஆன் லைன் சந்தையை விவசாயிகளுக்கு கொடுத்து அதிக லாபம் பெற செய் !!!

11 தமிழக அரசே வங்காளத்தை போல செயற்கை நீர் நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவி !!!

இப்படி இல்லாமல் வெறும் விவசாய
கடன்களை தள்ளுபடி செய் என்று சொல்வது சரியா..?

வாங்கின கடனை கட்டாமல் எல்லாரும் தள்ளுபடி கேட்கும் மனநிலை சரியா…? நாளைக்கே மற்ற துறையை சார்ந்த தொழிலாளர்களும் இதே போல் கடன் தள்ளுபடி கேட்டால் அனைவர் மீதும் கூடுதல் வரிசுமை வருமே, அதை ஏற்பீர்களா…?

நீங்க கடன் வாங்கி கட்டாததுக்கு நான் ஏன் கூடுதல் வரிசுமையை ஏற்கனும் சொல்லுங்க…

அய்யாகண்ணு அவர்களே, உங்களை போல ஆட்கள் தள்ளுபடி ருசி கண்ட பூனை என்பது அனைவருக்கும் தெரியும்… இனியாவது போலி போராட்டங்களை செய்யாமல் வீட்டுக்கு போங்க…

Leave a Reply