கும்பகோணம் அருகேயுள்ள அய்யா வாடி பிரத்யங்கிராதேவி கோயிலில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

தஞ்சைமாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் அகத்தீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் வடபுறத்தில் மஹா பிரத்யங்கிரா தேவி சன்னதி உள்ளது.

இந்தகோயிலில் மூலவராக உள்ள அகத்தீஸ்வர சுவாமியையும், மஹா பிரத்யங்கிரா தேவியையும் பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து ராஜ பதவி அடைந்தார்கள் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புடைய கோயிலில் அமாவாசை தினத்தில் பிரத்யங்கிரா தேவிக்கு யாகமும், சிறப்புபூஜைகளும் செய்யப்படும்.

இந்நிலையில் இக்கோயிலிலுக்கு சனிக் கிழமை மாலை தனது மனைவியுடன் வந்த பாஜக தேசியதலைவர் அமித்ஷா பிரத்யங்கிரா தேவி சன்னதியில் சிறப்புஹோமம் மற்றும் வழிபாடு நடத்தினார். அமித்ஷா வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply