மோடி தலைமையிலான அரசின் சாதனையைகொண்டாட 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக., தலைவர் அமித்ஷா கூறினார். மோடி அரசின் 2 ஆண்டு நிறைவுதொடர்பாக அரசு இதுவரை செய்த சாதனைகளை விளக்கும் வகையில் அவர் நிருபர்களை சந்தித்தார். பேட்டியில் அவர்கூறியதாவது:

நீண்ட காலத்திற்குபின் மோடியின் ஆக்கப்பூர்வ அரசு நாட்டில் அமைந்துள்ளது. ஆட்சியில் அமர்ந்த நாள்முதல் இந்தநாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது. ஊழலற்ற இந்தியாவை மோடி உருவாக்கி யுள்ளார். உலகளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது. சமீபத்திய வளர்ச்சிமூலம் 21 ம் நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் திறம்பட ஆட்சிசெய்வதில் வெற்றி பெற்றுள்ளோம். நாட்டின் நலனுக்காக மோடி முடிவுகளை எடுப்பதில் திறம்பட செயல் பட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு மண் வள அடையாள அட்டை, ஏழைகளுக்கு சமையல்காஸ் இணைப்பு, வங்கிகணக்கு துவக்கம், பல்வேறு சட்டங்கள் இயற்றியது, வரும் 2019 ல் 6 கோடி பேருக்கு சமையல்காஸ் இணைப்புவழங்க இலக்கு ஆகியன பயனுள்ள திட்டங்கள் ஆகும். மோடி அரசின் சாதனையை கொண்டாட 30 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் எங்களின் சாதனைகளை எடுத்துசெல்வோம்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அமித் ஷாவிடம், மத்திய மந்திரி சபை மாற்றப்படுகிறதா? என்று நிருபர்கள் கேட்ட போது அதனை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் எப்போது? என்று சொல்ல மறுத்து விட்டார்.அமித்ஷா இதுபற்றி கூறும்போது, இப்போதுள்ள அரசியல் சூழ்நிலை அல்லது நேரம் உள்பட பல்வேறுகாரணங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இதுபற்றி உங்களுடன் நான் விவாதிக்கமுடியாது .

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply