பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று 2 ஆண்டுகளை பூர்த்திசெய்ய உள்ள நிலையில், அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் முன்னிலைப் படுத்த வேண்டுமென கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாஜ.வின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கியதலைவர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுசெய்ய உள்ள நிலையில், மக்கள் மத்தியில், அரசின் திட்டங்களான முத்ராதிட்டம், சமையல் எரிவாயு இணைப்பு விரிவாக்க திட்டம், அனைத்து கிராமங்களுக்கு மின்வசதி திட்டம், குறைந்த விலையில் எல்இடி விளக்குகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய சாதனைகளை முன்னிலைப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் விவகாரத்தில் இன்று மாநிலங் களவையிலும், வரும் 6ம் தேதி மக்களவையிலும் விவாதம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் ராஜிவ் பிரதாப்ரூடி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனசங்கின் நிறுவனர்களில் ஒருவரான பல்ராஜ் மாதோக் நேற்று முன்தினம் காலாமானார். அவரது மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply