மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில், ராமர்கோயில் கட்டுவது மற்றும் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது ஆகியவை 2 முக்கியமான இலக்குகள்.

என்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோயில் கட்டுவது இறுதி கட்டத்துக்கு நெருங்கி விட்டது. அதனால் என்னைபோன்ற மக்கள் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. மக்கள் தொகையை கட்டுபடுத்துவதற்கான ஒருசட்டத்தை அமல்படுத்திய பிறகு நான் அரசியலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். 67 வயதான கிரிராஜ் சிங், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கடந்தமாதம் நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.