அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றுவருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யநாயுடு, அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது; அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆந்திராவுக்கு வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன் வாஜ்பாயின் அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு உலகநாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றன. குடியரசு துணைத்தலைவர் ஆக வேண்டும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

குடியரசு துணைத் தலைவராக என்னை தேர்ந்தெடுத்த போது நான் கண்ணீர் விட்டேன். மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் நான் கண்ணீர் விடவில்லை. விவசாயியின் மகனான நான் நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்வதை எண்ணி கண்ணீர் விட்டேன். குடியரசு துணைத்தலைவர் ஆனதால் இனிமேல் பாஜக கட்சி அலுவத்திற்கு செல்ல முடியாது என வருந்தினேன். குடியரசு துணைத்தலைவர் பதவியில் அமர்ந்ததும் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகினேன்.

Comments are closed.