அரசியல் கட்சி பிரமுகர்கள் யாராக இருந்தாலும் பொதுஇடத்தில் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும். சசிகலா புஷ்பா எம்.பி. விவகாரம் அருவருக்கத் தக்கது. பொது இடத்தில் ஆண் நபரின் கன்னத்தில் அறைந்தது தவறு. ஆண், பெண் யாராக இருந்தாலும் பொது இடத்தில் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்துகிறது.

சசிகலா புஷ்பா அவரது கட்சியைப்பற்றி குறை கூறுவது. உள்கட்சி விவகாரம் . சசிகலா புஷ்பா பாராளுமன்றத்தில் பேசியகருத்தின் உள்நோக்கம் தெரியாமல் அதுபற்றி கருத்துக்கூற இயலாது. அவர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றி பாரதிய ஜனதா அரசு முடிவுசெய்யும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாரதிய ஜனதா பயிற்சியாளர் பயிற்சிமுகாம் 234 சட்டசபை தொகுதிகளிலும் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் பயிற்சிமுகாம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற சட்ட சபை தொகுதிகளிலும் இந்த பயிற்சிமுகாம் நடைபெறும்.

இதில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்தும் பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு ஆற்றிய செயல் பாடுகள் குறித்தும் விளக்கமாக பயிற்சி அளிக்கப்படும். இந்த குரு பெயர்ச்சி மற்றும் அனைத்து பெயர்ச்சிகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சிறப்பாக இருக்கும்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம்  கூறியது:-

Leave a Reply