தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவை நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கியமனு ஒன்றை கொடுத்தார். அதேபோல் சசிகலாவும் கவர்னரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், எனவே தன்னை ஆட்சிஅமைக்க அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இருவரின் கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் கவர்னர் வித்யா சாகர் ராவ் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் லக்னோ நகரில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில்அளித்து அவர் கூறுகையில், ‘‘அரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான் என்று என்னால்கூற இயலும். அவரால் சுயமாக எந்தமுடிவையும் எடுக்க முடியும். அதற்கான தனிப்பட்ட உரிமை கவர்னருக்கு இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply