ரபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுக்களை தள்ளுபடிசெய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்த விதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளது

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும்.

“அரசியல் வளர்ச்சிக்காக ரபேல் போர்விமான விவகாரம் தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார். ராகுல் காந்தியின் அரசியல் பிரசாரம் உலகளவில் இந்தியாவின் தோற்றத்தை சிதைத்து விட்டது. காங்கிரஸ் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால், அதற்குப் பதிலாக பா.ஜனதா மீதும் போட்டியாக ஏதாவது ஒருகுற்றச்சாட்டை காங்கிரஸ் கூறுகிறது என்றார்.

Leave a Reply