மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தனது சொத்துப் பட்டியலை அறிவித்துள்ளார். வெளிப்படைத்தன்மை வேண்டுமென் பதற்காக அனைத்து மத்திய அமைச்சர்களும் தங்கள் சொத்துமதிப்பை வெளியிட வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி உத்தரவி ட்டிருந்தார்.
அதன்படி முதல் ஆளாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். அவரது சொத்துமதிப்பு பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தற்போது அருண்ஜெட்லியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அவரது சொத்துமதிப்பு ரூ.67.1 கோடியாக இருந்துள்ளது. தற்போது அது ரூ.60.99 கோடியாக குறைந்துள்ளது. அதாவது 8.9 சதவீதம் அவரது சொத்துமதிப்பு சரிவு கண்டுள்ளது. அவரது வங்கிகணக்கில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு ரூ.3.52 கோடியும், 2016 ம் ஆண்டு ஒருகோடி ரூபாயும் குறைந்துள்ளது.