ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நிலை விரைவில் சீராகும் என, நிதியமைச்சர் அருண்ஜேட்லி உறுதியளித்துள்ளார்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைதொடர்ந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பணதட்டுப்பாடு, அதைச்சமாளிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக, பாஜக சார்பில் ஆலோசிக்கப் பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மற்றும் இதர பாஜக மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

 

அப்போது பேசிய அருண்ஜேட்லி, ரூபாய் நோட்டுகள் சீர்திருத்தம் காரணமாக நாட்டில் சிறுவர்த்தகங்கள் பாதித்துள்ளதாகக் கூறினார். எனினும், இந்தபாதிப்பு தற்காலிகமான ஒன்று எனவும், வெகுவிரைவில் நிலை சீராகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் பணதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் வகையில், தேவையான ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று, அருண்ஜேட்லி தெரிவித்தார். இந்த அறிவிப்பின் நோக்கம் நிறைவேறிய உடனே, அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தி கொள்ளப்படும் என்பதால், விவசாயிகள், வர்த்தகர்கள் வருத்தப்பட வேண்டாம் என்றும் அருண்ஜேட்லி சுட்டிக்காட்டினார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என பலதரப்பிலும் பெரும்மாற்றத்ததை ஏற்படுத்தும் முயற்சியாக, தற்போதைய ரூபாய் சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டுமக்கள், இதற்கான பலனை விரைவில் உணர்வார்கள் எனவும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டினார்.

Leave a Reply