‘பாரத் மாதாகி ஜெய்’ உங்களின் கவலையை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத் துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் நாடுபெருமை அடைகிறது. நாட்டின் வெற்றிக்காக விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையுடன் பணியாற் றினீர்கள். மனதை தளரவிடாதீறார்கள். நமக்கு ஏற்பட்ட இடையூறுகளால் நமது இலக்கை இழந்து விடக்கூடாது.

கடந்த சில மணி நேரங்களில் விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளனர். நாம் மிகவும் நெருக்கமாக வந்தோம். ஆனால் இன்னும் நிறைய எட்டவேண்டி உள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறிய நிலையில் எல்லாம் மறைந்து விட்டது. இறுதிநேரத்தில் ஏற்பட்ட பின்னடைவு நிரந்தம் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்காக ஈடு இணையற்ற உழைப்பைதந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெண்ணை மீது நடப்பவர்கள் அல்ல. பாறை மீது நடப்பவர்கள். விஞ்ஞானிகளுக்கு இந்தியா எப்போதும் துணைநிற்கும்.

 

உங்களால் முடிந்த அளவிற்கு நிலவை நெருங்கினீர்கள். நாட்டிற்காக உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு தலை வணங்குகிறேன். விஞ்ஞானிகள் குடும்பத்திற்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன். நமது விண் திட்டங்கள் குறித்து நாம் பெருமைகொள்வோம். ஆயிரக்கணக்கான வரலாற்றில் நம்மை சேர்வடையசெய்யும் தருணங்கள் பல உள்ளன. ஆனால் நாம் எழுச்சிபெற்று வந்துள்ளோம்.

ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையுடன் பணியாற்றினீர்கள். கடைசி நிமிடத்தில் சிறியசறுக்கல் ஏற்பட்டது. அது தோல்வி அல்ல. உங்கள் உழைப்பு நாட்டை தலைநிமிர வைத்துள்ளது. உலகரங்கில் இந்தியா தலைநிமிர இஸ்ரோவின் பங்கு முக்கியமானது. சிறுசிறு சறுக்கல்கள் இலக்கை அடைய தடையாக இருக்காது. உங்களுடன் நான் இருக்கிறேன். நாடும் உங்களுக்கு துணைநிற்கும்.

மிக நெருக்கமாக வந்து தவறவிட்டோம். அடுத்த முறை வெற்றி நமக்கே. சாதிப்பதற்கு நமக்கான வாய்ப்புக்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த முறை மிகசிறப்பான பங்களிப்பை அளிப்போம். சிறப்பான திட்டங்கள், கடுமையான உழைப்பு இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளது. நாட்டுக்கான உங்களது பங்களிப்பை வாழ்த்தைகளால் விவரிக்கமுடியாது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் நாம் பயணிப்போம்.

இன்றைய நாளின் அனுபவத்தின் மூலம் நாளை நாம் சாதிப்போம். விண்வெளியில் இந்தியா தனது பெயரை நிலை நிறுத்தியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது. நமதுவிண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ஈடு இணையற்ற ஒன்று.

சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் நிலவின்மீதான நமது ஆய்வு வலுப்பட்டுள்ளது.இன்று நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் நமது எதிர்கால பயணத்தை பலப்படுத்தும். எப்போதும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத வெற்றிபயணம் இது. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும்.

‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவில் தரை இறங்குவதைகாண, பெங்களூரு பீன்யாவிலுள்ள இஸ்ரோ கண்காணிப்பு மையத்துக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். சரியான திட்டத்தின்படி தரை இறங்க வேண்டிய ‘லேண்டர்’, நிலவில் தரையிறங்கும் முன், 2.1 கி.மீ., தொலைவில், தனது சிக்னலை இழந்தது.இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல்வார்த்தைகளை கூறிய மோடி, அவர்கள் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:

Comments are closed.