ஆங்கிலமருத்துவ முறையான அலோபதிக்கு இணையாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடுவழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

நாடுமுழுவதும் தற்போது மருத்துவ காப்பீடு பெரும்பாலும் அலோபதி சிகிச்சைக்கு மட்டுமே உள்ளது. ஆயுஷ் முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்டவகை நோய்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை அளிக்கப் படுகிறது.

இந்தவேறுபாடுகளை களைந்து, அலோபதிக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீடுதொகை வழங்கப் பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்துவருகிறது. இதற்கு ஒப்புதல் அளிக்கும்பொருட்டு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து  அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “அலோபதிக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கும் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என எங்கள் அமைச்சகம் விரும்புகிறது. இதை கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் ஏற்றுக் கொண் டனர். என்றாலும் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் காப்பீடுதொகை அளிக்கலாம் என்றும் மருத்துவமனைகளின் தரம் குறித்தும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என கருத்து கூறியுள்ளனர். எனவே மேலும் சிலஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு ஆயுஷ் சிகிச்சைக்கும் காப்பீடு அளிக்க ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply