மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தால் ஜல்லிக் கட்டுக்கான தடை நிரந்தரமாக வந்து விடும் என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்திவருகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தூண்டி விடுபவரும் அவர்தான் ,

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரசட்டம் கொண்டுவந்தால், நிரந்தர தடை வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.  ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்ததாண்டு பா.ஜ.க, முயற்சி மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசரசட்டம் கொண்டு வர பரிசீலனை செய்யவேண்டும் எனக் கூறினார்.

Leave a Reply