வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் பாஜக முதன் முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைபிடிக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக  கூட்டணி 84ல் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கிறது.

.

 அஸ்ஸாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான  வாக்கு எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு இரண்டுகட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், 65 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் கடந்த ஏப்ரல் 4-ம் தேதியும், எஞ்சியிருந்த 61 தொகுதிகளுக்கு இரண்டாம்கட்டமாக கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது.

மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி இன்று காலை தொடங்கியது. . இங்கு மொத்தம் 1064 வேட்பாளர்கள் களத்தில்இருந்தனர். இந்தமாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய மக்கள் கட்சியும் இணைந்து போட்டி யிட்டன. அதேபோல பாஜக , அசோம் கண பரிஷத், போடோ மக்கள் ஃபிரன்ட் ஆகிய கட்சிகள் இணைந்து களம்கண்டன. அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக ஃப்ரன்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக களம் கண்டன.

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவரும் நிலையில், பாஜக  சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரபானந்தா சோனோவால், இன்று காலை, கோயிலில் சாமிதரிசனம் செய்தார். இதனிடையே வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக  தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறத்தொடங்கியது. அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் எல்லாம் வெற்றிமுகம் காட்ட தொடங்கினர். இதையடுத்து, அந்தமாநிலத்தில், 84 தொகுதிகளில் பாஜக  கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து அந்தக்கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அந்த மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.

இந்தவெற்றியை தொடர்ந்து அந்தமாநில மக்களுக்கு பாஜக  முதலமைச்சர் வேட்பாளர் சரபானந்த சோனாவால் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். மேலும் இந்தவெற்றிக்காக அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து கொண்டுள்ளனர். பாஜக  வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்து கொண்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடியும் இத்தகைய சிறப்பானவெற்றிக்காக கட்சியினருக்கு வாழ்த்துக்களையும், பொது மக்களுக்கு நன்றியினையும் தெரிவித்து கொண்டுள்ளார்.

அந்தமாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களிலும், மூன்றாவது அணி 10 இடங்களிலும் மற்றவர்கள் 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி பெற்றுள்ள அமோகவெற்றியின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில் பாஜக முதல் முறையாக முத்திரைபதித்துள்ளது.

Leave a Reply